ஊரடங்கு உத்தரவையும் மதிக்காமல் சுற்றித்திரிந்த 2,535 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இருக்கும் எண்ணிக்கையை காட்டிலும், அங்கு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மக்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியது போலவே, கேரள முதல்வர் பினராய் விஜயனும் அதனை கடுமையாக அமல் படுத்தி வருகிறார். ஆனால் கேரள மக்களில் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றித் திரிவதும்,
அதனை தடுக்கும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடுவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதன்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களின் 1,656 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2,535 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் கேரள காவல்துறையும், அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது.