Categories
தேசிய செய்திகள்

“144” கூட்டம் வேண்டாம்….. 24 மணி நேரமும் கடை திறந்திருக்கும்….. டெல்லி முதல்வர் அறிவிப்பு….!!

144 தடை உத்தரவை முன்னிட்டு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் கடைகள் மட்டும் 24 மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

கொரோனா  பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 144 தடை உத்தரவை இந்தியாவில் பிறப்பித்தார். இதனை ஏற்று பொதுமக்களும் தங்களது வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ளனர். அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கிடைக்கும் கடைகள் மட்டுமே திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் கொரோனா பாதுகாப்பு குறித்தும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பேட்டியளித்துள்ளார். அதில்,

கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் அவ்வப்போது கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தப்படும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் கடைகள் அனைத்தும் டெல்லியில் 24 மணி நேரமும் செயல்படும் எனவும் அறிவித்தார். ஆகவே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கடைகளில் வாங்காமல் 24 மணி நேரத்தை பயன்படுத்தி தனிமையில் வந்து வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். மேலும் உணவு டெலிவரி தடையின்றி 24 மணி நேரமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |