Categories
மாநில செய்திகள் லைப் ஸ்டைல்

144 தடை உத்தரவு – வாங்கி வைக்க வேண்டிய உணவுகள் என்னென்ன ?

கொரோன தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நம் ஊரில் உச்சம் தொட்டு இருக்கின்றது. நம்மையெல்லாம் முடிந்தவரையில் வீட்டிலேயே இருக்கச் சொன்ன அறிவுறுத்தலும், வலியுறுத்தலும் 144 தடை உத்தரவை மாறிவிட்டது. இந்த தனிமை காலகட்டத்தை சமாளிக்க என்னென்ன உணவு பொருட்களை எல்லாம் வீட்டில் வாங்கி வைக்கலாம் என்ற கவலை உலகம் முழுவதும் பலருக்கும் எழுந்துள்ளது.

பொதுவாக இந்த மாதிரியான காலகட்டங்களில் சீக்கிரத்தில் கெட்டுப் போகாத உணவு பொருட்களையே வீட்டில் வாங்கி வைக்க வேண்டுமென்று கிறார்கள். சுய ஆயுள் அதிகம் கொண்ட சில விசேஷ உணவு பொருட்கள் இதற்காகவே பரிந்துரைக்கப் படுகின்றன. அவை என்னென்ன ? என்பதை முதலில் பார்க்கலாம்.

தேன்க்கான பட முடிவுகள்

சீக்கிரத்தில் கெட்டுப் போகாத உணவு வகைகளில் முதலிடம் பிடிப்பது தேன். சுத்தமான தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போவதே இல்லை என்கிறார்கள். சப்பாத்தி, பூரி என எந்த உணவையும் தேன் இருந்தால் சாப்பிட்டு விடலாம். அதிக நாட்கள் வீட்டில் இருப்பு வைத்துக் கொள்ள கூடிய உணவு பொருள் அவல்.  இன்ஸ்டன்ட் உணவான இதனை கொண்டு விதவிதமான ரெசிபிகளை சமைக்க முடியும்.

அதே போல பாஸ்தா, நூடுல்ஸ் போன்ற உணவுகளும் மாதக்கணக்கில் கெட்டுப்போகாதவை. விதவிதமாக சமைக்குகவும் தோதானவை. தினமும் பால் வாங்குவது கூட பாதுகாப்பு இல்லை என்ற நிலை பல நாடுகளில் உள்ளது. அப்படிப்பட்ட இடங்களில் பால் பவுடர் வாங்கி வைக்கலாம். பழங்கள் ஏதும் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதில்லை. ஆனால் பேரீச்சை இதில் விதிவிலக்கு. பேரீச்சையோடு உலர் திராட்சை பழங்களை வாங்கி வைத்தால் மாதம் முழுக்க வைத்து பயன்படுத்தலாம்.

பேரீச்சைக்கான பட முடிவுகள்

காய்கறிகள் வெங்காயம் நீண்ட நாட்கள் தாங்க கூடியது. தக்காளி தாங்காது, அதனால் தக்காளி தக்காளி எஸ்ட்ராக் அல்லது தக்காளி சாஸை அதற்கு பதிலாக பயன்படுத்தலாம். அசைவம் சாப்பிடக் கூடியவர்கள் வீட்டில் வாங்கி வைத்து பயன்படுத்த கூடிய ஒரே ஆப்ஷன் கருவாடு . எறும்பு மற்றும் வண்டுகள் புகாத டப்பாக்களில் வைத்தால் நன்றாக உலர்ந்த கருவாடுகள் மாதக்கணக்கில் அப்படியே இருக்கும்.

பட்டை , இலவங்கம் போன்ற மசாலா பொருட்கள் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை. மிளகாய் பொடியும் அப்படித்தான். பூண்டுக்கும் மூன்று மாதம் வரை சுய ஆயுள் உண்டு.  இஞ்சியை மண் நிரப்பிய ஒரு தொட்டியில் புதைத்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு பயன் படுத்தலாம். இவை தவிர அரிசி, கோதுமை மாவு. வறுத்த அரிசி மாவு, உப்பு, சர்க்கரை போன்றவற்றை கொஞ்சம் அதிகம் வாங்கி வைப்பது, நாம் அடிக்கடி கடைக்கு போவதை தவிர்க்கும். பெரும்பாலான கடைகள் மூடப்படும் காலம் வந்தாலும் கவலைப்படாமல் நம்மை வாழவைக்கும்.

Categories

Tech |