நெல்லையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல தற்காலிக சந்தை உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்கறி சந்தைகளில் முழுவதுமாக கூட்டம் கூட அது தற்போது மூடப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கூட மக்கள் சிரமம் அடைந்தனர். இதை கருத்தில் கொண்டு நெல்லை மாநகராட்சி பூங்கா அருகே தற்காலிக உழவர் சந்தை அமைத்து மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது. அதன்படி, சிறுசிறு வட்டமிட்டு அந்த வட்டத்திற்குள் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது. பொதுமக்களும் கொரோனா குறித்த அச்சத்தை உணர்ந்து இடைவெளி விட்டு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.