உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, வரும் 25ம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும், 29 ஆம் தேதி அன்று குரு கோவிந்த்சிங் ஜெயந்தியும் மற்றும் வர இருக்கும் ஜனவரி 1 ஆம் தேதி அன்று புத்தாண்டை முன்னிட்டும் பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிகள் கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை தினங்களை கருதி அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடை பல கட்சித் தொண்டர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அனுமதியின்றி பேரணி நடத்துவதை தடுப்பதற்காகவும் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.