Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு ….. !!

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. 

தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகள் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை மூடப்படும் என்ற ஒரு உத்தரவை தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதே போல இன்று  மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தார். அத்யாவசிய தேவைகளை தவிர மற்ற நடவடிக்கைகள் ஈடுபடக் கூடாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |