Categories
தேசிய செய்திகள்

ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வு…”எங்கள் மாணவர்கள் 145 பேர் சாதனை”… மத்திய அமைச்சர் பெருமிதம்…!!

ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளில் சிறுபான்மையான மாணவர்கள் 145 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை தேர்வு செய்யும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதில் சிறுபான்மையின மாணவர்கள் 145 பேர் தேர்வு பெற்றிருப்பதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பெருமிதத்துடன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “சிறுபான்மையின இளைஞர்களின் திறமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உகந்த நேர்மறையான சூழலை மோடி அரசு வழங்கி உள்ளது.

இந்த உள்ளடக்கிய அதிகாரமளித்தலின் நேர்மறை சூழலானது, சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இந்த மிகப்பெரிய ஆட்சிப்பணிகளில் தேர்வாவதை உறுதி செய்கிறது” இவ்வாறு அவர் கூறினார். அவர் மேலும் இது பற்றி கூறும்போது, “இந்த வருடம் கூட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 145 பேர் இந்த புகழ்பெற்ற சிவில் சர்வீசஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் 22 பேர் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரை சேர்ந்தவர்கள். இவர்கள் சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் ‘நை உதான்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச பயிற்சி மூலம் இந்த சாதனையை எட்டியிருக்கின்றனர்” என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |