Categories
மாநில செய்திகள்

“1459 கள்ளக்காதல் கொலைகள்” காவல்துறை அறிக்கை தாக்கல் …!!

10 ஆண்டுகளில் 1459 கள்ளக்காதல் கொலைகள் நடைபெற்றுள்ளதாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தவறான உறவு முறையால் தமிழகத்தில் நடைபெற்றுள்ள கொலைகள் , கொள்ளைகளை நாம் பார்த்துள்ளோம். கலாசார சீரழிவின் காரணமாக இந்த கொலைகள் மற்றும் குற்றச்சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வில் காவல்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கை அனைவரையும் தூக்கி வாரி போட்டுள்ளது.

அதாவது  தமிழகத்தில் கள்ளக்காதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 1459 கொலைகள் நடைபெற்றுள்ளது என்றும் , கள்ளகாதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 213 குற்றங்கள் நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்த போலீஸ் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 621 குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்ற அறிக்கை தாக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

Categories

Tech |