Categories
தேசிய செய்திகள்

1,472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் காலியிடங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க….!!!!

நாடு முழுவதும் 1472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் மற்றும் 1057 ஐ எஃப் எஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் நாட்டில் 6789 ஐஏஎஸ் பணியிடங்கள், 4984 ஐபிஎஸ் பணியிடங்கள் மற்றும் 3,191 ஐ எஃப் எஸ் பணியிடங்கள் உள்ளன என்று மத்திய பணியாளர் விவகாரத்துறை இணை அமைச்சர் ஜிஜேந்திர சிங் மக்களவையில் கடந்த புதன்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 5,371 ஐஏஎஸ், 4,120 ஐபிஎஸ் மற்றும் 2,134 ஐஎஃப்எஸ் அதிகாரிகள் பணிபுரிகின்றனர். காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு வேலையை எதிர் நோக்கி காத்திருப்போர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |