சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
சித்திரை திருவிழா என்பது மதுரையில் மட்டும் இல்லாது பல இடங்களில் மிகவும் விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் அனைவரும் கோவிலுக்குசென்று கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அனைத்து இடங்களில் விழாக்கள் தடை செய்யப்பட்டு இருந்தது.
தற்போது இந்தஆண்டு திருவிழா நெருங்கும் நிலையில் பக்தர்ககளுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக ஏப்ரல் 15 ஆம் தேதி மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கப்படவுள்ளது. இந்த விழாவில் சுவாமி நான்கு மாசி விதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்தர உள்ளார். இந்த திருவிழா 12 நாட்களுக்கு நடைபெறும். இதனால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.