Categories
கிரிக்கெட் விளையாட்டு

15ஓவரில் CSK…. பொறுப்புடன் ஆடும் கெய்க்வாட்…. பக்கபலமாக ஜடேஜா ..!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசன் ஆட்டங்கள் இன்று தொடங்குகியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் கொரோனா சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய 31 ஆட்டங்களை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து அதன்படி, துபாய், சார்ஜா, அபுதாபி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

இரண்டாவது சீசன் போட்டியின் முதல் ஆட்டம் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. நீண்ட காலமாக ஐபிஎல் போட்டிகளை கண்டு ரசிக்க முடியாமல் இருந்த கிரிக்கெட் ஆர்வலர்கள் மீண்டும் போட்டிகள் தொடங்க ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய போட்டி தொடங்கி டாஸ் போடப்பட்டது. அதில் சென்னை அணி டாஸில் வெற்றிபெற்று பேட்டிங்கை தேர்வு செய்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா விளையாடவில்லை. இன்றைய போட்டியில் போலார்டு கேப்டனாக செயல்படுவார் என்று உறுதி செய்யப்பட்டது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டூ பிளெஸ்ஸி- ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். மும்பை சார்பில் ட்ரென்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார். 5ஆவது பந்தில் பாப் டூ பிளெஸ்ஸி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க, 2ஆவது வீரராக களமிறங்கிய மொயின் அலியும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆடம் மில்னே பந்தில் ஆட்டமிழந்தார்.

3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அம்பதி ராய்டு ரிட்டைட் ஹர்ட்டில் வெளியேற 4ஆம் விக்கெட்டுக்கு களமிறங்கிய ரெய்னா போல்ட் ஓவரில் 4அடித்து  ரன் கணக்கை தொடங்கி, பேட் உடைந்து ராகுல் சஹர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 5ஆவது விக்கெட்டுக்கு கேப்டன் தோனி ருதுராஜ் கெய்க்வாடடுடன் ஜோடி சேர்ந்தார். தோனி 3ரன் எடுத்த நிலையில் மில்னே  பந்தில் ஆட்டமிழக்க 6ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா களமிறங்கினர்.

15ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து  அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ருதுராஜ் கெய்க்வாட் – ஜடேஜா ஈடுபட்டனர். இருவரும் ஜோடி சேர்ந்து 50ரன் சேர்த்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 46ரன்னுடனும், ஜடேஜா 25ரன்னுடனும்,  களத்தில் உள்ளனர். மும்பை அணி சார்பில் போல்ட் 2விக்கெட்டும், ஆடம் மில்னே 2விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

Categories

Tech |