Categories
அரசியல் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

15வருஷமா மூடப்பட்ட ஆலைகள்… 20வருட திமுக கோட்டை… தி.மலை தொகுதி ஒரு பார்வை …!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவண்ணாமலை. இந்த தொகுதியில் உள்ள ஒரே நகராட்சி திருவண்ணாமலை நகராட்சி மட்டுமே. வேறு பேரூராட்சிகள் நகராட்சிகள் இந்த தொகுதிக்குள் வரவில்லை. மேலும் 68 ஊராட்சிகள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.இங்கு விவசாயமே பிரதானமாகும். நெல், கரும்பு, மணிலா மற்றும்  வாழை ஆகியவை பயிர் செய்யப்படுகின்றன. 55 ஆயிரம் ஏக்கரில் நெல், 42 ஆயிரம் ஏக்கரில் கரும்பு, 45 ஆயிரம் ஏக்கரில் மணிலா 20 ஆயிரம் ஏக்கரில் வாழை  சாகுபடி செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட இருநூறு குடும்பங்கள் சிற்பக் கலையை தெய்வமாக மதிக்கிறார்கள். பல ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகின்றார்கள். திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள சிறு சிறு தொழிற் கூடங்களை தவிர பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இங்கு இல்லை. பிரசித்திபெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அவர்களை நம்பி தான் சிறு தொழில் கூடங்கள் உள்ளன. இந்தத் தொகுதியில் 2001, 2006, 2011 மற்றும் 2016 என நான்கு  சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியில் கடந்த 2011 இல் இருந்து சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஏ.வ.வேலு.

நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆருக்கா... எடப்பாடி பழனிசாமிக்கா?" - எ.வ.வேலு | Former dmk minister velu slams edappadi palanisamy

திருவண்ணாமலை தொகுதியில் பத்து குளங்கள், ஆறு மற்றும் ஏரிகளை  ஏவா. வேலு தூர்வாரி உள்ளார். மேலும் 20,000 மரங்களை நட்டு உள்ளார். தமிழக அரசின் மணிலா எண்ணெய் பிழியும் ஆலை இருபது வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்படவில்லை. இதனை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் இருக்கிறது. திருவண்ணாமலையில் இருந்து நேரடியாக சென்னைக்கும், பெங்களூருக்கும் ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. திருவண்ணாமலையைச் சுற்றி சுற்றுவட்ட பாதை அமைக்கும் பணிகள் 10 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டே இருக்கிறது.

திருவண்ணாமலை தொகுதியில் கரும்பு விவசாயிகளுக்காக இயங்கி வந்த ஒரே தனியார் சர்க்கரை ஆலை, அருணாச்சல சக்கரை ஆலை பத்து வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டுள்ளது. ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. திருவண்ணாமலை தொகுதியில் அதிக அளவு மலர் சாகுபடி நடக்கும் நிலையில் இங்கு  அரசு சார்ந்த வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |