15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும், அனைத்து ஊராட்சி செயலர்களுக்கு சார்புநிலை கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
இதனையடுத்து பேரிடர் காலத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட ஊராட்சி செயலர், சங்க செயலாளர் சுந்தரபாண்டி தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து ஒன்றிய தலைவர் முத்துக்குமரன் மற்றும் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.