Categories
தேனி மாவட்ட செய்திகள்

15 அம்ச கோரிக்கைகள்…. பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. எச்சரிக்கை விடுத்த நிர்வாகிகள்….!!

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்டத்தில் பங்களாமேடு பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரசு அறிவித்த கடன் தள்ளுபடி குறித்த பயனாளிகளின் குறித்த பட்டியலை விரைந்து நிறைவு செய்ய வேண்டும், அரசின் உத்தரவின்படி ஓய்வூதியம், கருணைத்தொகை வழங்க வேண்டும், பதவி உயர்வை விரைவில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருணகிரி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாநில பொதுச்செயலாளர் காமராஜ்பாண்டியன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் என பலரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்து மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த மாதம் ஜனவரி 5ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |