Categories
உலக செய்திகள்

15 ஆண்டுகள் பணிக்குச் செல்லாத மருத்துவமனை ஊழியர்…. வெளிச்சத்திற்கு வந்த திருட்டுத்தனம்…. நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர்….!!

இத்தாலியில் 15 ஆண்டுகள் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் வாங்கி வந்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியில் 15 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் சம்பளம் வாங்கி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  Salvatore Scumace என்பவர் Catanzaro மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக சேர்ந்துள்ளார். இதனிடையே மருத்துவமனை இயக்குனருடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் மருத்துவமனை இயக்குனரை மிரட்டி வருகை பதிவேட்டில் இருந்து பெயர் நீக்காமல் விட்டு வைத்துள்ளார்.

அடுத்த ஆண்டு மருத்துவமனை இயக்குனர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் பணிக்கு வந்த பொறுப்பாளர்களும் வருகை பதிவேட்டை கவனிக்காமல் இருந்துள்ளனர். இதனால் Scumace ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் ஏமாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட 6 மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |