Categories
தேசிய செய்திகள்

15 காலிப்பணியிடங்களுக்கு 11 ஆயிரம் விண்ணப்பங்கள்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் பியூன், ஓட்டுனர் மற்றும் வாட்ச்மேன் ஆகிய  15 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த வேலைக்காக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் 11000 வேலையற்ற இளைஞர்கள் குவாலியர் நகரத்தில் குவிந்தனர். இங்கு வந்திருந்த  விண்ணப்பதாரர்கள் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பொறியாளர்கள், எம்பிஏ பட்டதாரிகள் ஆகிய படிப்புகளை படித்த இளைஞர்கள் ஆவர். ஆனால் இந்த வேலைக்கு 10 வகுப்பு தான் கல்வி தகுதி நிர்ணயித்திருந்தது.

அப்போது விண்ணப்பதாரர் அஜய் பாகேல் கூறியது, “நான் ஒரு அறிவியல் பட்டதாரி நான் பியூன் வேலைக்கு விண்ணப்பித்து உள்ளேன். இங்கு பிஎச்டி படித்தவர்களும் வரிசையில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.இன்னொரு விண்ணப்பதாரர் ஜிதேந்திர மவுரியா கூறியது, “நான் சட்ட பட்டதாரி டிரைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளேன். நான் நீதிபதி தேர்வுக்கு தயாராகி வருகிறேன். சில சமயங்களில் புத்தகங்கள் வாங்க பணம் இல்லாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த வேலை கிடைக்கும் என்று நினைத்து விண்ணப்பித்துள்ளேன்” என்று அவர் மிகுந்த வருத்தத்துடன் கூறினார்.அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச அரசின் சமீபத்தில் தெருவோர வியாபாரிகள் திட்டத்திற்கு கிட்டத்தட்ட 15 லட்சம் விண்ணப்பங்கள் வந்தது.

அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 90% பேர் பட்டதாரிகள் ஆவார். இதற்கு முன்னதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியது, “ஒரு வருடத்தில் 1,00,000 பேரை அரசு வேலையில் பணியமர்த்துவோம். மேலும் அனைவருக்கும் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்ல சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு மாணவருக்கு அரசு வேலை கிடைக்காது” என்று சில தினங்களுக்கு முன் கூறினார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நரேந்திர சலுஜா கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது சிவராஜ் அரசின் 17 ஆண்டு கால வளர்ச்சியில் உண்மையில் எப்படி இருக்குது என்பதை இது காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பிரதேசத்தில் வேலையின்மை விகிதம் நவம்பர் மாதத்தில் 1.7% இருந்தது. இது மற்ற மாநிலங்களை விட மிக குறைவாக உள்ளது என்று இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |