Categories
உலக செய்திகள்

15 கோடிக்கு மேல கொரோனா பாதிப்பா…? தினந்தோறும் உயரும் எண்ணிக்கை…. இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம்….!!

உலகம் முழுவதும் 15 கோடிக்கும் மேலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. மேலும் கொரோனாவினுடைய முதல் அலை மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய நிலையில் தற்போது 2 ஆம் அலை மிக வேகமாக பரவுகிறது. அதிலும் முக்கியமாக இந்தியாவில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை வேகமாக பரவுவதால் இந்தியாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் அதற்கான தடுப்பூசிகள் தீவிரமாக அனைத்து பொது மக்களுக்கும் போடப்பட்டு வருகிறது.

இருப்பினும் தினந்தோறும் தொற்று அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் உலகளவில் 15,27,88,755 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13,00,69,129 ஆக உள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு 1,95,13,840 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 32,5,786 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |