பிரதமர் மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். பிரதமர் மோடியின் சுற்றுப் பயணங்களின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நவீன கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய Meecedes Maybach S60 கார் வாங்கப்பட்டுள்ளது. இந்த கார் சுமார் 12 கோடி ரூபாய் ஆகும்.
இந்த கார் நிற்கும் இடத்தில் இருந்து 2 மீட்டர் சுற்றளவில் சுமார் 15 கிலோ எடையுள்ள வெடிகுண்டு வெடித்தாலும் காருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் காரின் கண்ணாடிகள் துப்பாக்கி குண்டு துளைக்க முடியாத அளவுக்கு வலிமை கொண்டது. இந்த காரின் கண்ணாடிகள் அனைத்தும் உட்புறமாக பாலி கார்பனேட் பூச்சு பூசப்பட்டுள்ளது. விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டாலும் காரில் இருப்பவர்களுக்கு தனியாக காற்று வினியோகம் கிடைக்கும். மேலும் காரின் டயர்கள் சேதம் அடைந்தாலோ பஞ்சர் ஆனாலோ காற்று இறங்காது.