Categories
மாநில செய்திகள்

15 டிசைன்களில் சேலை, 5 டிசைன்கள் வேட்டி…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட அரசு தரப்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் எனவும் ஆயிரம் ரூபாய் ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாமல் இதனுடன் சேர்த்து கரும்பு வழங்கப்படும் எனவும் நேற்று அறிவிப்பு வெளியானது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளன.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வழங்குவது சற்று தாமதம் ஆனாலும் தரமானதாக வழங்கப்படும் என அமைச்சர் காந்தி உறுதியளித்துள்ளார். இது பற்றி அவர், இதுவரை வழங்கப்பட்டதற்கும் தற்போது வழங்கப்பட உள்ள வேட்டி சேலைகளுக்கும் நிறைய வித்தியாசங்களை காணலாம். 15 வகையான டிசைன்களில் சேலைகள் மாற்றியுள்ளோம்.ஐந்து டிசைன்களில் வேட்டிகளும் தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |