Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“15 தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி”…. கலெக்டர் அறிவிப்பு….!!!!!!!!

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கல்வராயன் மலையில் உள்ள 8 ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் 15 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 937 மாணவ மாணவ மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்குவது பற்றி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர்மன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியபோது தமிழக முதல் அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் நகர மற்றும் கிராம பகுதிகளில் செல்லும் குழந்தைகளுக்கு காலையிலே பள்ளிக்கு சென்று விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதில்லை பள்ளிகள் மிக தூரமாக இருப்பது மட்டுமல்லாமல் சில நேரங்களில் குடும்ப சூழ்நிலையும் இதற்கு காரணமாக அமைகின்றது.

அதனால் முதற்கட்டமாக சில மாநகராட்சி நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட இருக்கின்றது. 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து நாட்களிலும் காலை வேளையில் சிற்றுண்டி உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வளங்கும் சிறப்பு வாய்ந்த திட்டத்தை மிகச் சிறப்புடன் மேற்கொள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள்  பள்ளி தலைமை ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்குனர் திட்ட இயக்குனர் தேவநாதன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட  அலுவலர் செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணபவா, கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஊராட்சி அளவிலான சுய உதவி குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |