Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“15 நாட்களாக மின்சாரம் இல்லை”…. இருளில் சூழ்ந்த கிராமம்…. மின்விளக்கில் படிக்கும் மாணவ-மாணவிகள்…!!!!!!

15 நாட்களாக மீனாட்சிபுரம் கிராமத்தில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இவர்கள் சென்ற பதினைந்து நாட்களுக்கு மேல் மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். பகலில் அரைக்கண்டாக மின்சாரம் வருவதாகவும் இரவு நேரத்தில் அதுவும் துண்டிக்கப்படுவதாகவும் பகலில் பாதி அளவு இருந்த மின்விளக்குகள் விரைவில் சுத்தமாக எரிவதில்லை எனவும் கூறுகின்றார்கள்.

இதனால் மாணவ-மாணவிகள் மண்ணெண்ணெய் விளக்கில் பாடம் பயின்று வருகின்றார்கள். இரவில் வீட்டை விட்டே வெளியேற முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிலும் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறுகின்றார்கள் பொதுமக்கள். இந்த நிலை தற்போதும் நீடித்து வருவதால் இது குறித்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |