இ-காமர்ஸ் என்று சொல்லப்படக்கூடிய இணையவழி வர்த்தகத்தில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் முறையினை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.அடிப்படையில் உணவு டெலிவரி செய்யக்கூடிய இணையவழி இ-காமர்ஸ் நிறுவனங்களின் மீது புகார்கள் எழுந்தன.
டெலிவரி, பேக்கிங் கட்டணங்களின் உண்மைத் தன்மை மற்றும் விநியோக நேர மாறுபாடுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க zomato உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, டெலிவரி நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் காட்டப்படும் விலை மற்றும் அளவுகள் குறித்த 15 நாட்களில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.