இந்தி திரைத்துறையில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜு ஸ்ரீ வஸ்தவா. இவர் கடந்த பத்தாம் தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஒரு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது பற்றி நடிகர் ராஜுவின் சகோதரர் பேசும்போது, அவருக்கு லேசான நெஞ்சுவலி தான் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் அவர் சுயநினைவுடன் இருக்கிறார் என கூறியுள்ளார். எனினும் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் வைத்து அவருக்கு அடுத்த நாள் சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என கூறப்பட்டது. அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டரிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என நெருங்கிய வட்டாரம் கூறியுள்ளது.
அவரது நிலைமை மோசம் அடைந்திருக்கிறது எனவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அவரை தீவன கண்காணிப்பில் வைத்து கவனித்து வருகிறது எனவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. இந்த சூழலில் நடிகரின் தனி செயலாளர் கார்வித் நரங் இன்று பேசும் போது, ராஜேஷ் ஸ்ரீ வஸ்தாவிற்கு 15 நாட்களுக்கு பின் மருத்துவமனையில் இன்று சுயநினைவு திரும்பிருக்கிறது. அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றார்கள் என தெரிவித்துள்ளார். ராஜுவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். ராஜுவின் சகோதரர் தீபு ஸ்ரீவஸ்தா பேசும் போது, அவர் ஒரு போராளி இந்த போரில் வெற்றி பெற்று விரைவில் திரும்புவார் அதன் பின் ஒவ்வொருவரையும் காமெடியால் மகிழ்விப்பார் என இதற்கு முன்பு வெளியான வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.