தமிழக அரசு காவிரி நீர் விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்து அதன் மூலம் தமிழக அரசுக்கு வேண்டிய நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதியை வேளாண் தொழிலை மேற் கொள்வதற்கு ஏதுவாக மரபுரிமைக்கு இயல்பாக காவிரி நதிநீர் கிடைக்கின்ற சூழ்நிலை மாறி நமக்கு உரித்தான பங்கை நாம் வற்புறுத்தி கேட்டுப் பெறுகின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல், நீதிமன்ற ஆணையையும் செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முக்கியமான பணி காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவின் உதவியுடன் காவிரி நீர்ப் பங்கீடு ஒழுங்கு முறை மற்றும் கட்டுப்பாடு கண்காணித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதே ஆகும். ஆனால் 2021 19 ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி வரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட்டிருக்கிறது என்று தமிழகம் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து அதனை உடனடியாக விடுவிக்குமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் இதுகுறித்து 15-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் கூறியிருந்த நிலையில் அதுகுறித்து திட்டமிட்டபடி கூட்டம் இன்னும் நடைபெறவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை இன்னமும் திறந்து விடாது மௌனம் காப்பது கண்டனத்துக்குரியது. எனவே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடகா தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை தமிழகத்துக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.