உலக நாடுகளை வேட்டையாடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும விட்டுவைக்கவில்லை. இதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் திருப்பதி கோவிலில் அர்ச்சகர்கள் உட்பட பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தடுப்பு நடவடிக்கையை ஆந்திர மாநில அரசு முன்னெடுத்து வருகின்றது.
திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 15 நாட்களுக்கு பகல் 11 மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் பொதுமக்கள் வெளியே வரக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கடைகள் உணவகங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.