சிறுவன் ஒருவன் பல நாட்களாக தன் தாயின் சடலத்துடன் வாழ்த்துவந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸிலுள்ள பாதுகலே என்ற பகுதியில் வசிக்கும் 11 வயதுடைய சிறுவன் ஒருவன் அவசர உதவி குழுவை போன் மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதில் அச்சிறுவன் தன் தாய் பலமுறை எழுப்பியும் கட்டிலிலிருந்து எழவில்லை என்றும் தனக்கு பயமாக உள்ளதாகவும் உடனடியாக வருமாறும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக சிறுவன் கூறிய முகவரிக்கு சென்றுள்ள உதவிக்குழுவினர் வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அங்கு சிறுவனின் தாய் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
மேலும் அவர் உயிரிழந்து பல நாட்கள் கடந்துள்ளது. அதனை அறியாத சிறுவன் தாய் எழவில்லை என்று நினைத்துள்ளார். இதனால் 15 நாட்கள் அவன் சடலத்துடன் இருந்துள்ளார். இதனையடுத்து உதவி குழு அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே இது இயற்கை மரணமா? கொலையா அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.