வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு பூசணிக்காய் சூப்பை இவ்வாறு செய்து தந்தால் நல்ல பலன் கிடைக்கும். எப்படி செய்வது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப்,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
பால் – ஒரு டம்ளர்,
மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
பூண்டு – 2 பல்,
சின்ன வெங்காயம் – 4,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம் , பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் போட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின்பு பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கி 4 டம்ளர் விட்டு வேக வைக்கவும்.
பூசணிக்காய் வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு, காயை மட்டும் எடுத்து ஆற வைத்த பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வேகவைத்த தண்ணீருடன் கலந்து கொள்ளவும். பால், மிளகு, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.
பயன்கள்:
இதனை சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள், கல் உள்ளவர்கள், உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் அருந்தி வந்தால் மிகவும் நல்லது. நீர்க்கடுப்பு, நரம்புத் தளர்ச்சி, மூலக்கடுப்பு, மூல நோய்கள் மறையும். சக்கரை நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் சக்கரை நோய் கட்டுப்படுத்தப்படும். வயிற்றுப்புண், குடல் புண் இருப்பவர்கள் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் குணமாகும்.