Categories
டெக்னாலஜி

15 நிமிடத்திற்குள்…! WhatsApp-ல் வேற லெவல் அப்டேட்… இனி கலக்கல் தான்…!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது.  இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி வாட்ஸ்அப்பில் அதிரடியான புதிய அப்டேட் வரவுள்ளது. இதன்படி நாம் அனுப்பும் குறுஞ்செய்தியை எடிட் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தியில் ஏதேனும் தவறு இருந்தால் 15 நிமிடத்திற்குள் அதை நாம் எடிட் செய்துகொள்ளலாம். எடிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தியில் ‘Edited’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இது வாட்ஸ்அப் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |