ஒரு கப் கோதுமை மாவு இருக்கா, 15 நிமிஷத்துல செஞ்சிடலாம் அருமையான கோதுமை அடை..!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப்
துருவிய கேரட் – 2
குடமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 2
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
வத்தல் பொடி – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு நாம் துருவி வைத்திருக்கும் கேரட்டை சேர்த்துக் கொள்ளவும். அதன் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சை மிளகாய், மல்லித்தழை இவை அனைத்தையும் சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளவும்.பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட், வத்தல் பொடி, கரம் மசாலா தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து கிளறி விட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு தேவைப்பட்டால் முட்டையையும் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளலாம். பின்னர் எடுத்து தோசையாக ஊற்றி சாபிடலாம் சுவையான அருமையான கோதுமை அடை ரெடி..!