சில நேரங்களில் பயணம் செய்வதற்கு ஓலா மற்றும் ஊபர் போன்ற செயலிகள் மிகவும் உதவினாலும் சில நேரங்களில் சொதப்பத்தான் செய்கிறது. இங்கிலாந்தில் தனது பணி முடிந்து வீடு திரும்பிய ஆலிவர் கப்லான் என்பவர், ஊபர் செயலியை பயன்படுத்தி ஆறு கிலோமீட்டர் பயணம் செய்தபோது 32 லட்சத்திற்கு பில்லை கொடுத்துள்ளார் ஓட்டுநர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பயணி உடனே கஸ்டமர் சர்வீஸ் இடம் கேட்டபோது அவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.இதன் பின்பு உபர் நிறுவனம் டார்ப் லொகோஷனை சரியான இடத்திற்கு மார்க் செய்து 10.73 பவுண்ட் தொகையை மட்டும் வசூலித்துள்ளது. இந்தச் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.