புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
மதுரை கிழக்கு பகுதியில் இருக்கும் கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை மனுக்கள் போக்குவரத்து துறைக்கு அனுப்ப பட்டது. இந்த மனுக்களை பரிசீலனை செய்த போக்குவரத்து துறை 15 கிராமங்கள் வழியாக புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பேருந்துகளுக்கான சேவைகள் அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன்படி, தொண்டமான்பட்டி _ பெரியார் பேருந்து நிலையம், கடவூர் _ அண்ணா பேருந்து நிலையம், சின்னப்பட்டி _ பெரியார் பேருந்து நிலையம், சிகுபட்டி _ பெரியார் பேருந்து நிலையம், வெளிச்சநத்தம் _ மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பாரைப்பட்டி _ பெரியார் பேருந்து நிலையம், கூளப்பன் _ பெரியார் பேருந்து நிலையம், மாரணி _ பெரியார் பேருந்து நிலையம், குலமங்கலம் _ பெரியார் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம், செட்டிகுளம் _ பெரியார் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம், அழகர் கோவில், மிளகரணை பெரியார் பேருந்து நிலையம் போன்ற வழித்தடங்களில் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.