விவசாய கிணற்றில் விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
தர்மபுரியில் யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. 50 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் இருந்து யானையை மீட்பதற்கு முதலில் மயக்க ஊசி செலுத்தி வெளியில் கொண்டுவர திட்டமிடப்பட்டது. கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு யானைக்கு தேவையான உணவு கொடுக்கப்பட்டது.
யானையை தூக்குவதற்கு கிரேன் வர காலதாமதம் ஆனதால் யானைக்கு இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தி காத்திருந்தனர். தற்போது பலரது போராட்டத்திற்கு பலன் கிடைக்கும் விதமாக கிரேன் உதவியுடன் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து 15 மணி நேரத்திற்கு பிறகு யானையை வெற்றிகரமாக வெளியில் கொண்டு வந்துள்ளனர்