Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. 3 மாதங்களாக அரங்கேறிய கொடூரம்…. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது….!!!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள வானவரெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உதவி தலைமை ஆசிரியராக துளசிராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர்  மாணவர்களுக்கு கணக்கு பாடமும் நடத்துகிறார். இவர் 5-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகளுக்கு கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தால் தேர்வில் தோல்வி அடைய செய்து விடுவேன் என்று  மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவிகள் பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் துளசிராமன் ஒரு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவி தனது பெற்றோரிடம் சென்று கூறியுள்ளார். இதேபோன்று சக மாணவர்களும் பெற்றோரிடம் துளசிராமன் குறித்து கூறியுள்ளனர். இதனால் அச்சமடைந்த துளசிராமன் விடுப்பு எடுத்துக்கொண்டு 1 மாதம் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இவர் விடுப்பு முடிந்து பள்ளிக்கு வந்ததும் மாணவிகளின் பெற்றோர் துளசிராமனிடம் சென்று நியாயம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த துளசிராமன் மாணவிகளின் பெற்றோர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துளசிராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |