மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வானவரெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உதவி தலைமை ஆசிரியராக துளசிராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 15 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கள்ளக்குறிச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துளசிராமனை கைது செய்தனர். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி துளசிராமனை பணியிடை நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.