15 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகை கடைக்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு வரும் சிறுமிகளுக்கு நடராஜன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் சிறுமிகளை கடைக்குள் அழைத்து சென்று தொட்டு பேசுவது, ஆபாசமாக பேசுவது என தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனை சிறுமிகள் வீட்டில் சொல்லாமல் மனதுக்குள்ளையே மறைத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் சிறுமிகள் படித்து வரும் பள்ளியின் தலைமை ஆசிரியை மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது குட் டச், பேட் டச் குறித்து மாணவிகளிடம் கருத்து கேட்டு தலைமை ஆசிரியை தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். அப்போது 13 வயது மாணவி தலைமை ஆசிரியரிடம் எங்கள் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவி தெரிவித்துள்ளார்.
மேலும் 14 மாணவிகள் நடராஜன் குறித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த தலைமை ஆசிரியை பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் நடராஜனை கைது செய்தனர். பின்னர் நடராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மைதானா? எத்தனை பேர் அவரால் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.