Categories
தேசிய செய்திகள்

15 மாதங்கள் கழித்து…. மீண்டும் வெளிநாட்டு பயணம்…. செய்யும் பிரதமர் மோடி…!!

சீனாவில் இருந்து  பரவிய கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடந்த மார்ச் மதமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மேலும் இந்த கொரோனாவானது சாதாரண மக்களை மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களையும், சினிமா பிரபலங்களையும் கூட பதம் பார்த்து விட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனாவிற்கு முன்னதாக பல்வேறு வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வந்தார் .

ஆனால் தற்போது இந்த கொரோனா காரணமாக கடந்த 15 மாதங்களாக அவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும், வெளிநாட்டுப் பயணத்திலும் மேற்கொள்ளாமல் இருந்தார். இதை யடுத்து வங்கதேச நாட்டில் சுதந்திரதின பொன்விழாவில் கலந்து கொள்வதற்காக மோடி வரும் மார்ச் 26ஆம் தேதி வங்கதேசம் செல்கிறார். 15 மாதங்களுக்குப் பிறகு மோடி செல்லும் முதல் வெளிநாட்டு பயணங்கள் இதுவே ஆகும்.

Categories

Tech |