Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

15 மாவட்டங்களில் மிக முக்கிய முடிவு – இன்று மாலை அறிவிப்பு …!!

இன்று மாலை 15மாவட்ட ஆட்சியரிடம் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகின்றார்.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்திருத்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும்,  குறிப்பாக சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் இதன் பாதிப்பு எண்ணிக்கை கடந்த காலங்களை விட தற்போது  அதிகரித்து கொண்டே வருகின்றது. எனவே இதனை கருத்தில் கொண்டு அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று மாலை 5.30 மணி அளவில் தலைமைச் செயலகத்திலிருந்து  தலைமைச் செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டனர்.

குறிப்பாக சென்னை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், திருச்சி உள்ளிட்ட அதிக பாதிப்பு இருக்கக் கூடிய 15 மாவட்ட ஆட்சியருடன் இந்த ஆலோசனை  கூட்டம் நடைபெறுகின்றது. இதில் கொரோனா அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல் நோயை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள், அந்தந்த மாவட்ட  ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் குழுக்களின்  செயல்பாடுகள் எவ்வாறு இருக்கிறது ? போதியளவு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டிருக்கிறதா ? படுக்கை வசதிகள் போதிய அளவு இருக்கிறதா ? அதற்கான தடுப்பு மருந்துகள் உள்ளதா ? என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கின்றது.

குறிப்பாக கபசுரக் குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மருந்துகள் மற்றும் மல்டி விட்டமின் மாத்திரைகள் போதிய அளவில் கையிருப்பில் இருப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல் இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் இருக்க கூடிய சூழ்நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியது அவசியமா ? என்று நோய் அதிகம் பாதித்துள்ள மாவட்ட ஆட்சியரிடம் தலைமை செயலாளர் ஆலோசிக்கிறார். கூடுதலாக கட்டுப்பாடுகள் தேவை இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அரசு சார்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பாக அரசு முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

Categories

Tech |