நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உள்நாட்டு உற்பத்தியில் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பு தடுப்பூசியான இதனை 15 முதல் 18 வயதுக்கு செலுத்துங்கள் என்று பாரத் பயோடெக் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், அங்கீகாரம் பெறப்படாத கொரோனா தடுப்பூசிகள் 15 முதல் 18 வயதினருக்கு செலுத்தப்படுகிறது என எங்களுக்கு பல்வேறு தனி நபர்களிடமிருந்து தகவல்கள் வருகிறது. எனவே 15 வயது முதல் 18 வயதுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது என உறுதி செய்து கொள்வதுடன் அதிக கண்காணிப்புடன் இருக்க வேண்டுமென்று சுகாதாரப் பணியாளர்களை நாங்கள் தயை கூர்ந்து கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.