Categories
தேசிய செய்திகள்

15 லட்சம் சம்பாதிக்க வேண்டுமா?….! இதோ சூப்பரான திட்டம்…. ஜாயின் பண்ணி பாருங்க….!!!

தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சேமிப்புத் திட்டங்களில் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் மிக முக்கியமான ஒன்றாகும். இதில் சேமிக்கும் பணத்திற்கு வருமான வரி சட்டம் பிரிவு 80 சி யின் கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது. எந்த ஒரு இந்திய குடிமகனும்  இந்தத் திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளலாம். மைனர்களுக்காகவும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இணைப்பு கணக்காகவும் இதில் முதலீடு செய்துகொள்ளலாம்.

தற்போதைய நிலையில் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் 6.8 சதவிகிதம் வட்டி  கிடைக்கிறது. இந்த திட்டத்தில் இணைந்து 10 லட்சம் முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகளில் உங்களுடைய கையில் 13.89 லட்சம் இருக்கும். ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை வரிச்சலுகை  கிடைக்கும் . மேலும் இந்தத் திட்டத்தில் முதிர்வு காலத்திற்கு முன்னரே பணத்தை எடுக்க விதிமுறைகள் உள்ளன.

முதலீடு செய்தவர் இறந்துவிட்டாலும் நீதிமன்ற தீர்ப்பின் பெயரில் எடுத்துக்கொள்ளலாம். டெபாசிட் செய்த முதல் ஆண்டு இந்த சான்றிதழை  ரீடீம் செய்வதாக இருந்தால் அடிப்படை வட்டி மட்டுமே கிடைக்கும். அதே போல் ஒன்று முதல் மூன்று ஆண்டுகளில் ரீடீம் செய்வதாக இருந்தால் தபால் நிலைய சேமிப்பு கணக்குகளுக்கான  வட்டி விகிதம் வழங்கப்படும்.

Categories

Tech |