Categories
அரசியல் தேசிய செய்திகள்

“15 லட்சம் ரூபாய் தரேன்னு மோடி எப்போ சொன்னாரு….!!” சீதாராமன் பரபரப்பு பேச்சு…!!

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “யாருக்கும் 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி கூறவில்லை. ஒரு வாகனத்தின் எஞ்சினுக்கு அளிக்கப்படும் பெட்ரோல் போலத்தான் மக்களின் வரிப்பணமும் அது எங்கு செல்கிறது என்பது பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால் அது சரியான வழியில் செலவழிக்கிறதா.? என்பது தான் முக்கியம். உக்ரைன் விவகாரத்தால் பெட்ரோல் டீசல் விலை உயருமா என்ற கேள்வி சர்வதேச அளவில் இருந்து வருகிறது. ஆனால் இந்திய மக்கள் பாதிக்கப்படாத அளவிற்கு மத்திய அரசு கண்டிப்பாக வழிவகை செய்யும் கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

அவ்வாறாக எந்த வீழ்ச்சியையும் மத்திய அரசு சந்திக்கவில்லை. இனியும் சந்திக்காது. சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாய் உள்கட்டமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக வழங்கப்பட உள்ளது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் வருகின்ற 25 ஆண்டு காலம் இந்தியாவின் அமிர்த காலமாக விளங்கும். வைரஸ் பரவல் காரணமாக குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தூர்தர்ஷன் நிறுவனத்தின் மூலம் 200 கல்வி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன.” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |