நீட் உள்ளிட்ட 15 வகையான நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் விளக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்டத்திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக நீட் மற்றும் JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதத்திற்குள் நடத்தப்பட உள்ள 15 வகையான நுழைவுத் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்களுக்கு அதன் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். இதில் எந்தெந்த தேர்வுக்கு விண்ணப்ப பதிவு எப்போது தொடங்கும், அதற்கான விண்ணப்ப கட்டணம், தகுதி என்ன, எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தர வேண்டும் என தமிழகத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.