Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 வயதில் தாயை இழந்த வாலிபர்….. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு ரஞ்சிதா என்ற மகளும் ராஜி(27) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் ராஜி சென்னை பூக்கடை பகுதியில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாய் இறந்ததிலிருந்தே மன உளைச்சலில் இருந்த ராஜி கடந்த  ஒரு வாரமாக தாயை பார்க்க வேண்டும் என தனது அப்பா, அக்கா மற்றும் நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.

அவருக்கு அனைவரும் ஆறுதல் கூறியுள்ளனர். அதனை பொருட்படுத்தாமல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் ராஜி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எனது அம்மா என்னை அழைக்கிறார். நான் அம்மாவை பார்க்க வேண்டும்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |