Categories
மதுரை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது..!!

மதுரை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கின்ற பெரிய உலகாணி என்ற கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மகள் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். விடுமுறை காலம் என்பதால் விருசங்குளம் கிராமத்தில் இருக்கின்ற ஃபுட் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அமர்ஜித் என்ற 22 வயது இளைஞர் அந்த மாணவியை காதலித்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்ற 25 ஆம் தேதி சிறுமியின் வீட்டில் இருப்பவருக்கு தெரியாமல் அமர்ஜித் அச்சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த சிறுமியின் தந்தை மணிகண்டன் திருமங்கலத்தில் இருக்கின்ற அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், 18வயது முழுமை அடையாத பள்ளி மாணவியை திருமணம் செய்து கொண்ட காரணத் திற்காக வடமாநில இளைஞர் அமர்ஜித்தை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |