சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 10 வருட சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அடுத்து இருக்கும் சிறுபாலை கிராமத்தில் வசித்து வரும் மணி பிரசாத் என்பவர் மினி லாரி டிரைவராக இருந்த நிலையில் சென்ற 2014 ஆம் வருடம் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து மணி பிரசாத், அவரின் தந்தை, தாய், சகோதரர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மணி பிரசாந்துக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பாபுலால் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு நிவாரண நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்கவும் மற்ற 5 பேரை விடுதலை செய்யவும் உத்தரவிட்டார்.