15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே இருக்கும் புதுப்பாளையம் சின்னமுத்தியம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் டிரைவராக இருந்த நிலையில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்த நிலையில் சென்ற 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி சிறுமியை அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.
இதையடுத்து சிறுமி தனது தாயிடம் இதுபற்றி கூறியதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் வெங்கடேஷை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தார்கள். இந்நிலையில் இந்த வழக்கானது சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வெங்கடேஷுக்கு 20 வருடங்கள் சிறை தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.