உத்திரபிரதேச மாநிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மொரதாபாத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு ஐந்து நபர்களால் கொடூரமான முறையில் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளானார். பின்பு சிறுமியை குற்றாவாளிகள் சம்பவ இடத்திலேயே நிர்வணமாக விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து சிறுமி ரத்தப்போக்குடன் தன் கிராமத்திற்கு சாலையில் நிர்வாணமாக நடந்தே சென்றுள்ளார். சிறுமி நடந்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில் கொடூரம் என்னவென்றால் அந்த சிறுமிக்கு யாரும் உதவவில்லை. பதிலாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக பேசிய போலீசார், “குற்றவாளிகள் மீது செப்டம்பர் 7 ஆம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யபப்பட்டு செப்டம்பர் 15ஆம் தேதி அவர்களில் ஒருவரை கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தனர்