சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய வழக்கில், ஏழு பெண்கள், காவல் ஆய்வாளர், பாஜக பிரதமர் உட்பட 21 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட இருக்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறுமியின் உறவினர் ஷஹீதா பானு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி (எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவை சேர்ந்த தெபாசிஸ் நாமா போன்ற 26 பேர் மீது போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர்களில் 22 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். கடந்த 2020 ஆம் வருடம் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்துள்ளார். மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாரி, பாஷா, முத்துப்பாண்டி, மீனா போன்ற நான்கு பேர் தலைமறைவாக இருக்கின்றனர். மீதமுள்ள 22 பேருக்கு எதிரான வழக்கு விசாரித்து வந்த நிலையில் மாரீஸ்வரன் என்பவர் மரணம் அடைந்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ராஜலட்சுமி குற்றம் சாட்டப்பட்ட எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, மதன், குமார், சாய்தா, பானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன் ராஜா, சுந்தர் நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் என்கிற அஜய் கண்ணன் போன்ற 21 மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறி அவர்களை குற்றவாளிகள் என அறிவித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று நீதிபதி அறிவிக்க இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாக உமா ஆனந்த் மீது கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். அனுமதி இல்லாமல் பொது இடத்தில் கூட்டம் கூடுதல் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற நான்கு பிரிவுகளின் கீழ் உமா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கின்ற நிலையில் இன்று நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை அனுப்பியுள்ளது.