ஆந்திரா மாநிலம் குடிவாடா பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னா(30). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் எதிர் வீட்டில் இருக்கும் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுடன் டி.வி., பார்ப்பது வழக்கம். அப்போது அவர் 15 வயது சிறுவனுக்கு ஆபாச வீடியோக்களை போட்டுக்காட்டியுள்ளார். இருவரும் நெருக்கமாகவும் இருந்துள்ளனர். இப்படி பல நாட்களாக இருந்து வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் ஏதும் அறியாத சிறுவனின் பெற்றோர், சிறுவனை காணவில்லை என காவல்துறையில் புகாரளித்தனர். இதையடுத்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், ஸ்வப்னாவையும் காணவில்லை என்பதை உறுதி செய்து அவரின் செல்போன் எண்ணை வைத்து தேடியபோது, இருவரும் ஐதராபாத்தில் ஒரு லாட்ஜில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஐதராபாத் விரைந்த போலீசார், ஸ்வப்னாவை போக்ஸோ வழக்கில் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.