மத்திய பிரதேசத்தில் சத்னா மாவட்டத்தில் சந்குய்யா என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் ராம்பிரகாஷ் பதவுரியா என்ற சிறுவர்கள் 8-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். ராம்பிரகாஷ்-க்கு நேற்று வழக்கம்போல் ஆன்லைன் வகுப்பு நடைபெற்றுள்ளது. அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லை.
இந்தநிலையில் ராம்பிரகாஷ் செல்போனில் ஆன்லைன் வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த போது, திடீரென செல்போன் வெடித்துள்ளது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ராம்பிரகாஷ் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் செல்போன் வெடித்ததில் ராம்பிரகாஷ்-ன் தாடையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.