15 வயது பள்ளி மாணவிக்கு போலி இ-மெயில் மூலமாக ஆபாசப்படங்களை அனுப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல்லில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் இமெயில் முகவரிக்கு, அடையாளம் தெரியாத இ-மெயில் முகவரியில் இருந்து ஆபாச படங்கள் வந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தார்.
அதன்பிறகு விசாரணை செய்ததில், மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பிய நபர் திண்டுக்கல் காந்தி நகரை சேர்ந்த 20 வயதுடைய ஜனகன் என்பது தெரியவந்துள்ளது.அதுமட்டுமன்றி அவர் போலி இ-மெயில் முகவரி மூலமாக அந்த மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.